Saturday, March 23, 2013

சப்போட்டா பழம்..!













தாவர இயல் பெயர், ‘அக்ரஸ் சப்போட்டா’ (Achars sapota). . சப்போட்டேசியே (sapotceae) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. சப்போட்டாவிற்கு, ‘அமெரிக்கன்புல்லி’ என்று ஒரு சிறப்புப்பெயர், செல்லப் பெயர் உண்டு. 

2) 100 கிராம் சப்போட்டாப் பழத்தில் புரதம் 1.0 கிராம், கொழுப்பு 0.9 கிராம், நார்ச் சத்து 2.6 கிராம், மாவுப்பொருள் 21.4 கிராம், கால்சியம் 2.1 மில்லி கிராம், பாஸ்பரஸ் 27.0 மில்லி கிராம், இரும்புச் சத்து 2.0 மில்லி கிராம், தரோட்டின் 97 மைக்ரோகிராம், ரிபோஃபிளோவின் 0.03 மில்லி கிராம், நியாசின் 0.02 மில்லி கிராம் மற்றும் வைட்டமின் சி 6.1 மில்லி கிராம் உள்ளது.

தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் உச்சி முதல் உள்ளங்கால் வரை பலன் தரும். இளமைக்கு கியாரன்டி.

3) சப்போட்டா பழம், ரத்த ஓட்டத்தை சீராக்கி, கொழுப்பை- நீக்குகிறது. வாய்ப்புண், வயிற்றெரிச்சல், மூல நோய் மற்றும் மலச்சிக்கலுக்கும் தீர்வு தருகிறது., எலும்புகள் வலுவடையும்

4) இரவில் உறக்கம் வராமல் கஷ்டப்படுபவர்களுக்கு அருமருந்து இந்த சப்போட்டா. இதை சாறாக்கி அருந்தலாம். பழக்கூழ், ஜாம், சிரெப், மில்க் ஷேக், என்று விதவிதமாய் இதைத் தயாரித்துச் சாப்பிடலாம். சப்போட்டா பழக்கூழுடன், காய்ச்சின பால்சேர்த்து கீர் மாதிரி செய்து பருகலாம். அவரவர் கற்பனைக்கும் ரசனைக்கும் ஏற்றாற் போல் செய்து கொள்ளலாம். அல்லது வழக்கம் போல 'அப்படியே சாப்பிடலாம்'.

5) இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்ப பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு என அமெரிக்காவில் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கின்றது. சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்று நோய் ஏற்படாது. சருமத்தை மிருதுவாக்கும் தன்மை சப்போட்டா பழத்திற்கு உண்டு

6) உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைத்துவிடும் ஆற்றல் இதற்கு உண்டு.

No comments:

Post a Comment