Monday, August 25, 2014

உங்களுக்கு கோபம் அதிகமா வருமா?


உங்களுக்கு கோபம் அதிகமா வருமா? முதல்ல இத படிங்க..

உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அதற்கு நிறைய செயல்களை கடைபிடிப்பதோடு, ஒருசிலவற்றையும் அடக்கி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒருவர் எதை அடக்க தெரிகிறானோ, இல்லையோ, கோபத்தை அடக்க தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் கோபத்தால், ஒருவரது நட்பு எப்படி முறிய வாய்ப்புள்ளதோ, அதேப்போல் உடலில் உள்ள உயிரும் சில சமயங்களில் முறிய வாய்ப்புள்ளது. கோபம் என்பது எந்த நேரத்திலும் வரும். ஆனால் அந்த கோபம் அளவுக்கு அதிகமானால், அவை உடலில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும். உதாரணமாக, மன அழுத்தம், இதய நோய், இரத்த அழுத்தம், தலைவலி, போதிய தூக்கம் இல்லாமை போன்றவை. இத்தகைய பிரச்சனைகள் உடலில் வந்தால், பின் உடல் நிலையானது மிகவும் மோசமாகி, பின் இறப்பை சந்திக்க நேரிடும். ஆகவே கோபம் கொள்வதால், உடலில் எந்த மாதிரியான பிரச்சனைகள் வரக்கூடும் என்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனி கோபம் கொள்ளலாமா, வேண்டாமா என்பதை முடிவெடுங்கள்.
மன அழுத்தம்
கோபம் அதிகம் வந்தால், மன அழுத்தம் அதிகமாகும். மன அழுத்தம் அதிகமானால், நீரிழிவு, மன இறுக்கம், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.
இதய நோய்
கோபத்தின் காரணமாக ஏற்படும் படபடப்பு மற்றும் அதிகப்படியான இதய துடிப்பு போன்றவை இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சில சமயங்களில் அவை இதயத்திற்கு மிகவும் ஆபத்தான விளைவைக் கூட ஏற்படுத்தும்.
தூக்கமின்மை
எப்போது கோபப்படுகிறோமோ, அப்போது உடலில் உள்ள ஹார்மோன்களானது சுறுசுறுப்புடன் இருக்கும். இதனால் சரியான தூக்கம் கூட வராது. மேலும் உடலுக்கு வேண்டிய ஓய்வானது கிடைக்காமல், எளிதில் நோய்களானது உடலைத் தாக்கும். சிலசமயங்களில் தூக்கமின்மை ஒருவரை பைத்தியமாக கூட மாற்றிவிடும்.
உயர் இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தமானது பல காரணங்களால் நிகழ்ந்தாலும், அதில் கோபமும் ஒன்று. அதிலும் எப்போது கோபம் வருகிறதோ, அந்த நேரமே உடலில் இரத்த அழுத்தமானது உடனடியாக அதிகப்படியான அளவில் அதிகரிக்கும். அவ்வாறு உடனே அதிகரிக்கும் போது, இதயமானது பெரும் அளவில் பாதிக்கப்படும்.
சுவாசக் கோளாறு
சுவாசக் கோளாறான ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், கோபப்படும் போது சரியாக சுவாசிக்க முடியாது. ஆகவே ஆஸ்துமா உள்ளவர்கள், அதிகம் கோபப்பட வேண்டாம். இல்லையெனில் அது மூச்சடைப்பை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.
தலைவலி
எப்போது கோபம் வருகிறதோ, அப்போது இரத்த அழுத்தம் அதிகமாவதால், மூளைக்கும் செல்லும் இரத்த குழாயானது அதிக அளவில் மூளைக்கு வேகமாக இரத்தத்தை செலுத்தும் போது, மூளையில் ஒரு வித அழுத்தம் ஏற்பட்டு, தலை வலியை உண்டாக்கும். எனவே கோபத்தின் போது வரும் தலைவலியை குறைப்பதற்கு, உடனே அமைதியாகிவிடுவது நல்லது.
மாரடைப்பு
பொதுவாக ஒருவருக்கு மாரடைப்பானது அதிகப்படியாக உணர்ச்சிவசப்படுதல், ஆச்சரியப்படுதல் அல்லது கோபத்தின் காரணமாக ஏற்படும். இவற்றில் பெரும்பாலானோர் கோபத்தின் காரணமாகத் தான் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தான், இதய நோயாளிகளிடம் எந்த ஒரு அதிகப்படியான மகிழ்ச்சியான விஷயத்தையும் அல்லது அவர்களை கோபமூட்டும் விஷயத்தையும் சொல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மூளை வாதம்
மூளை வாத நோய் ஏற்படுவதற்கு மூளையில் உள்ள இரத்த குழாய்கள் வெடிப்பது தான் காரணம். இந்த மாதிரியான இரத்த குழாய்கள் வெடிப்பதற்கு முக்கிய காரணம் கோபம். ஏனெனில் கோபத்தினால், இரத்த அழுத்தமானது அதிகப்படியாக இருப்பதால், அவை இரத்த குழாய்களை சில சமயங்களில் வெடிக்கச் செய்து, உயிரைப் பறித்துவிடும். எனவே எப்போதும் அதிகப்படியான கோபம் கொள்ளக் கூடாது.

Wednesday, October 16, 2013

முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் 10 நன்மைகள்!!!




முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் 10 நன்மைகள்!!!






 

பச்சை இலைக் காய்கறிகளில் முக்கியமானது தான் முட்டைக்கோஸ். ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் களைக்கோசு கூட இந்த குடும்பத்தை சேர்ந்தவைகளே. பெரிய அளவில் உருண்டையான இலை வகையை சேர்ந்த முட்டைகோஸ் கிழக்கு மெடிடேரேனியன் மற்றும் ஆசியாவில் இருந்ததாக நம்பப்படுகிறது. வருடம் முழுவதும் கிடைக்கும் இந்த காய் ஆரோக்கியமான உணவு வகைகளில் ஒன்றாகும். சுலபமாக அனைவராலும் வாங்கக்கூடிய மலிவு விலை காயாகவும் விளங்குகிறது முட்டைக்கோஸ்.

முட்டைக்கோஸிலேயே சிவப்பு மற்றும் பச்சை என பல வகைகள் உள்ளது. அவைகளை பச்சையாகவும் உண்ணலாம் அல்லது சமைத்தும் உண்ணலாம். சில காயை போல் அல்லாமல், இதனை பச்சையாக சாப்பிட்டாலும் சுவை மிகுந்ததாகவே இருக்கும். அவற்றின் சுவை லேசான இனிப்புடன் நுகர்வதற்கும், சுவைக்கும் நன்றாக இருக்கும். வைட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் வளமையாக உள்ள முட்டைக்கோஸில் கலோரிகளும் குறைவாக உள்ளது. இதனை கிழக்கு மற்றும் மேற்கு வகை உணவுகளில் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

இப்போது அந்த முட்டைக்கோஸை உணவில் அதிகம் சேர்ப்பதால், எந்த மாதிரியான நன்மைகளைப் பெறலாம் என்று பார்ப்போமா!!!

புற்றுநோயை தடுக்க உதவும்

முட்டைக்கோஸில் உள்ள பல குணங்கள் புற்றுநோயை உண்டாக்கும் அணுக்களை எதிர்த்து போராடும். அதிலும் இதில் உள்ள சல்போரோபேன் மற்றும் இண்டோல் 3 கார்பினோல் புற்றுநோய் அணுக்களை எதிர்த்து போராடும் குணங்களை கொண்டவைகளாகும்.

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

முட்டைக்கோஸில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது. அதனால் இது நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து இயக்க உறுப்புகளை அடக்கும்.

அழற்சியை எதிர்க்கும் குணங்கள்

இந்த காய்கறியில் அமினோ அமிலங்கள் அதிகமாக உள்ளதால், அழற்சியினால் ஏற்படும் மூட்டு வலியை எதிர்த்து போராடும்.

கண்புரை இடர்பாட்டை நீக்கும்

முட்டைக்கோஸில் உள்ள பீட்டா-கரோட்டின் கண்களில் ஏற்படும் மாக்குலர்த்திசு சிதைவில் இருந்து காக்கும். அதனால் கண்புரை வராமல் காக்கும்.

அல்சைமர் ஏற்படும் ஆபத்து குறையும்
முட்டைக்கோஸை உட்கொண்டால், முக்கியமாக சிவப்பு நிற முட்டைக்கோஸ், அல்சைமர் என்னும் ஞாபக மறதி ஏற்படுவதைத் தடுக்கும் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு ஒன்று கூறுகிறது. அதற்கு காரணம் முட்டைக்கோஸில் உள்ள வைட்டமின் கே என்னும் சத்து தான்.

குடற்புண் சிகிச்சைக்கு உதவி புரியும்

குடற்புண் அல்லது வயிற்றில் ஏற்படும் அல்சரை குணப்படுத்த முட்டைக்கோஸை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் அதன் சாற்றில் உள்ள அதிக அளவிலான க்ளுடமைன், அல்சரை குணப்படுத்தும் குணங்களைக் கொண்டது.

உடல் எடை குறைய துணை நிற்கும்
எப்போதும் உடல் எடை மீது கவனம் கொண்டவர்கள் கண்டிப்பாக முட்டைக்கோஸை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு முழு கப் சமைத்த முட்டைக்கோஸில் வெறும் 33 கலோரிகள் தான் உள்ளது. அதனால் முட்டைக்கோஸ் சூப்பை எத்தனை கப் வேண்டுமானாலும் குடியுங்கள், அது எடையை அதிகரிக்காது.

மலச்சிக்கலுக்கு நிவாரணி

இதிலுள்ள நார்ச்சத்து சரியான செரிமானத்திற்கு உறுதுணையாக விளங்கும். அதனால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது.

பொலிவான சருமம்

இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அடங்கியுள்ளதால் அது வயதான தோற்றத்தை ஏற்படுத்தும் இயக்க உறுப்புகளில் இருந்து பாதுகாத்து, பொலிவான தோற்றத்தை தக்க வைக்கும்.

தசை வலியில் இருந்து நிவாரணம்

முட்டைக்கோஸில் உள்ள லாக்டிக் அமிலம், தசை வலிகளுக்கு நிவாரணம் அளிக்கும். எனவே தசை வலி இருக்கும் போது முட்டைக்கோஸை சமைத்து சாப்பிடுங்கள்.



 

உங்கள் பற்கள், ஆரோக்கியமாகவும் வெண்மையாகவும் இருக்க‍, சூப்பரான இயற்கை பேஸ்ட்கள்...!



உங்கள் பற்கள், ஆரோக்கியமாகவும் வெண்மையாகவும் இருக்க‍, சூப்பரான இயற்கை பேஸ்ட்கள்...!






 



பற்கள் சுத்தமாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு நாளைக்கு இரண்டு முறை பற்க ளை தேய்ப்போம். ஆனால் அவ்வாறு செய்தால் மட்டும் பற்கள் சுத்தமாகி விடுமா என்ன? பற்களை சுத்தப்படுத் தும் பேஸ்ட்களை மட்டும் பயன்படுத் தினால், பற்கள் சுத்தமாகிவிடும் என் று நினைக்க வேண்டாம். எப்போதும் செயற்கை பொருட்களை விட இயற் கை பொருட்களுக்கு நிறைய மகத்து வம் உள்ளது. அதேப்போல்தான் பற்களை துலக்கவும் ஒரு சில சூப் பரான இயற்கை பேஸ்ட்கள் இருக்கின்றன. அந்த பொருட்கள் அனை த்தும் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்கள்தா ன். அது என்னவெ ன்று பார்ப்போமா!!!

வேப்பங்குச்சி

இது ஒரு பழங்கால முறை. இன் றும் கிராமப்பகுதிகளில் மக்கள் வேப்ப ங்குச்சியைப் பயன்படுத்திதான் தங்க ள் பற்களை துலக்குகின்றனர். அத னால் தான், அவர்கள் பற்கள் இன்று ம் உறுதியாக இருக்கிறது. ஏனெனில் வேப்பங்குச்சியில் நிறைய ஆன்டி செப்டிக் மற்றும் ஆன்டி பயோடிக் பொருள் இருக்கிறது. மேலும் இத னைக் கொண்டு பற்களை துலக்கி னால், பற்கள் நன்கு சுத்தமாக பளிச் சென்று, துர் நாற்றம் நீங்குவதோடு, பற்களில் நோய்கள் எதுவும் வராம லும் இருக்கும். ஆகவே வேப்பங்குச்சியை கொண்டு பற்களை துல க்க, முதலில் அந்த குச்சியை உடைத்து, அதன்ஒரு முனையை நன்கு மென்று, பின் தேய்க்க வேண்டும்.

உப்பு

உப்பைக் கொண்டும் பற்களை துலக்க லாம். ஏனெனில் இதில் சோடியம் அதிக ம் உள்ளது. இதனால் பற்களில் உள்ள அழுக்குகள் போவதோடு, ஈறுகளும் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பற் களில் வலிகள் ஏற்பட்டால், அப்போது இதனைக் கொண்டு பற்களை துலக்க லாம். மேலும் இது வாய்துர்நாற்றத்தை ஏற்படாமலும் தடுக்கும். ஆகவே தினமு ம் ஒரு டீஸ்பூன் உப்பை எடுத்துக் கொண்டு, பற்களை துல க்குங்கள், பின் பாருங்கள் அதன் நன்மை எப்படி இருக்கிறதென்று.

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெயை வைத்து பற்களைதுலக்கினா ல், பற்கள் நன்கு வெள்ளையாக காணப்படும். இது வும் பற்களை துலக்க ஒரு சிறந்த முறை. அதற்கு அரை டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெயோடு, சிறி து உப்பை சேர்த்து கலந்து, பற்களை துலக்க வேண்டும்.

எலுமிச்சை

எலுமிச்சையில் அதிகமான அளவு வைட்டமி ன் சி உள்ளது. இது பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக வைக்கும். பொதுவாக இந்த எலுமிச்சை எத்தகையஅழுக்குகள் என்றாலும் நீக்கிவிடும், அத்தகையது பற்களில் உள்ள அழுக்குகளை நீக்காமலா இருக்கும். ஆகவே அதற்கு தினமும் எலுமிச்சை சாற்றை வைத்து பற்களை மற்றும் ஈறுகளை தேய்க்க வேண்டு ம். பின் பாருங்கள் வாய் புத்துணர்ச்சியு டன் இருக்கும்.

கிராம்பு

கிராம்பில் நிறைய மருத்துவ குணங் கள் அடங்கியுள்ளன. அத்தகைய கிரா ம்பு பற்களும் மிகவும் சிறந்தது. ஆக வே சிறிது கிராம்பு பொடியை வைத்து பற்களை தேய்க்க வேண்டும். இதனா ல் பற்கள் வெள்ளையாக இருப்பதோ டு, பற்களில் வலிகள் ஏற்பட்டால், அத னை சரி செய்துவிடும்.

ஆகவே பற்கள் நன்கு ஆரோக்கியமாக இருக்க, மேற்கூறிய பொருட் களையெல்லாம் பயன்படுத்துங்கள், பற்கள் நன்கு பளிச்சென்று மின்னும்.


 

Tuesday, September 17, 2013

சித்தர்கள் நமக்களித்த மூலிகைப் பொடிகளின் (சூரணம்) பெயர்களும், அதன் பயன்களும்



சித்தர்கள் நமக்களித்த மூலிகைப் பொடிகளின் (சூரணம்) பெயர்களும், அதன் பயன்களும்






*அருகம்புல் பொடி:- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பொடி:- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது

*கடுக்காய் பொடி:- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பொடி:- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கலா பொடி:- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பொடி:- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பொடி:- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பொடி:- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பொடி:- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பொடி:- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பொடி:- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பொடி:- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பொடி:- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பொடி:- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*ஜாதிக்காய் பொடி:- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பொடி:- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பொடி:- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பொடி:- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பொடி:- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பொடி:- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

*வேப்பிலை பொடி:- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பொடி:- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பொடி:- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பொடி:- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பொடி:- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பொடி:- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியாநங்கை பொடி:- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பொடி:- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது

*முடக்கத்தான் பொடி:- மூட்டு வலி, முழங்கால்வலி, வாதத்துக்கு நல்லது.

*கோரைகிழங்கு பொடி:- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பொடி:- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பொடி:- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பொடி:- ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பொடி:- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பொடி:- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பொடி:- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பொடி:- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பொடி:- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பொடி:- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பொடி:- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பொடி:- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பொடி:- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பொடி:- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பொடி:- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பொடி:- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பொடி:- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பொடி:- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பொடி:- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பொடி:- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பொடி:- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாலை பொடி:- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பொடி:- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.


*கருவேலம்பட்டை பொடி:- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும். 

Friday, July 12, 2013

மாம்பூவின் மருத்துவ குணங்கள்

மாம்பூவின் மருத்துவ குணங்கள்





முக்கனிகளில் ஒன்றாக போற்றப்படும் மாம்பழம் எண்ணற்ற மருத்துவப் பயன்களை கொண்டுள்ளது. வைட்டமின் சத்துக்களும், தாது உப்புகளும் கொண்டுள்ள மாம்பழத்தைப் போலவே மாம்பூக்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளன. பற்களுக்கும், ஈறுகளுக்கும் வலிமை தருவதோடு, வாய்ப்புண்களை குணமாக்குவதில் மாம்பூக்கள் மிகச்சிறந்த மருந்து பொருளாக விளங்குகின்றன. மாமரத்தில் கொத்து கொத்தாய் பூத்திருக்கும் மாம்பூக்களின் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்வோம்.


தொண்டை வலி குணமடையும்

தொண்டையில் புண் ஏற்பட்டு எதையும் சாப்பிடக்கூட முடியாமல் வலி உயிரை எடுக்கும். அந்த நேரத்தில் மாமரத்தில் பூத்திருக்கும் மாம்பூக்களை பறித்து நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும். அதனை நன்கு நீரில் கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டிக்கொண்டு அதில் எலுமிச்சம் பழத்தின் சாறினை பிழிந்து விடவேண்டும். அந்த தண்ணீரை நன்றாக தொண்டைக்குள் இறங்குமாறு கொப்பளிக்க தொண்டை வலி குணமடையும்.

வாய்ப்புண்ணுக்கு மருந்தாகும்

உலர்ந்த மாம்பூக்களை நன்றாக பொடிசெய்து மோரில் கலந்து பருகவேண்டும். தினசரி மூன்று வேளை பருகிவர மூன்று நாட்களில் வாய்ப்புண், வயிற்றுப்புண் காணாமல் போய்விடும். புத்தம் புதிய மாம்பூக்களை தினமும் பறித்து வாயில் போட்டு மென்று வர பல்வலி குணமடையும். பற்கள், ஈறுகள் பலமடையும். மாம்பூ, மாந்தளிர், இரண்டையும் நீரில் போட்டு கொதிக்க வைத்து இளம் சூட்டில் வாய் கொப்பளித்து வர பல்வலிக்கு நிவாரணம் கிடைக்கும். மாம்பூவைச் சேகரித்து தணலில் போட்டு அதன் புகையைத் தலையில் படுமாறு செய்தால் தலைபாரம், ஜலதோஷம் நீங்கும்.

நீரிழிவு நோய்க்கு

மாம்பூ குறிப்பாக நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. தொடர்ந்து பல நாட்கள் பயன்படுத்தும்போது இதன் நல்ல பயனைக் கண்டுணரலாம். மாம்பூ, நாவல் பழக்கொட்டை, மாந்தளிர் மூன்றையும் சம அளவாக சேகரித்து வெயிலில் காயவைத்து இடித்து பத்திரப்படுத்தவும். தினம் அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு வெந்நீரில் பருகவும். 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர நீரிழிவு நோய் குணமாகும் என்கின்றனர் மருத்துவர்கள். இடையே ரத்த சர்க்கரை அளவை பரிசோதித்து கொள்ளவேண்டும்

சீதபேதிக்கு அருமருந்து

மாம்பூ, மாதுளம் பூ, மாந்தளிர் வகைக்கு 5 கிராம் சேகரித்து நீர் விட்டு மைபோல் அரைத்து அதனை பசும்பாலில் கலந்து காலை, மாலை, 3 நாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் சீதபோதி நீங்கிவிடும்.

மாம்பூக்களைச் சேகரித்து உலர்த்தி ஒரு கைப்பிடியளவு எடுத்து இரண்டு பங்கு அளவு நீர் சேர்த்துக் காய்ச்சிக் கஷாயமாக்கி வடிகட்டி அரை டம்ளர் அளவு எருமைத் தயிரில் கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் சீதபேதி நீங்கிவிடும். மாம்பூ, பச்சை கொத்தமல்லி, தோல்நீக்கிய இஞ்சி, கருவேப்பிலை சமஅளவு எடுத்து துவையல் செய்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட குமட்டல் நீங்கும்.

மூலநோய் குணமடையும்

மாம்பூ, சீரகம், இரண்டையும் சம அளவாக எடுத்து தனித்தனியே உலர்த்திப் பொடியாக்கி சலித்து எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும். இந்த தூளில் 2 சிட்டிகை எடுத்து சர்க்கரையுடன் சேர்த்துக் காலை, மாலை தினமும் சாப்பிடவும் மூலநோய் கட்டுப்படும். உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு நேரத்திலும் இந்த மருந்தை உட்கொள்ளலாம்

கொசுத்தொல்லை நீங்க

உலர்ந்த மாம்பூவை நெருப்பிலிட்டு அதன் புகையை வீடு முழுவதும் காண்பிக்க கொசுத்தொல்லை ஒழியும்.




கிவி பழம்

கிவி பழம்





கிவி பழம் உடல் நலத்திற்கு நல்லது மிகவும் ஆனால் என்ன கொஞ்சம் விலை தான் அதிகம் நாம் அன்றாடம் வீண் செலவுகள் எவளவு செய்கிறோம் அதில் வீண் செலவுகளை கொஞ்சம் குறைத்து விட்டு இந்த மாதிரியான உடம்பிற்கு பயனளிக்க கூடிய அவற்றை சாபிட்டால் நம் உடல் நலத்திற்கு நல்லவைகையாக அமையும் .

மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. சிறப்பான உணவியல் தன்மை, மருத்துவப் பண்புகள் கொண்ட கிவி (Kiwi) என்ற பெயருடைய இந்தக் கனிக்கு சீனத்து நெல்லிக்கனி (Chinese Gooseberry) என்ற மற்றொரு பெயரும் உண்டு. இத்தகைய கனி பற்றி உலக அளவில் உணவியல் அடிப்படையிலும், மருத்துவ அடிப்படையிலும் நிறைய ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

இந்தக் கனிக்கு இப்பெயர் எவ்வாறு வந்தது?

இந்தக் கனியானது பெரும்பாலும் நியூசிலாந்து நாட்டில் அதிக அளவு பயிரிடப்படுகிறது, அங்கிருந்து உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் இந்தக் கனிக்கு ‘கிவி’ (KIWI) என்ற சிறப்புப் பெயர் உண்டு. பொதுவாக உலகில் நியூசிலாந்து நாட்டு மக்களை ‘க்விஸ்’ என்று செல்லமாக அழைப்பதுண்டு. அதன் காரணமாகத்தான் இந்தக் கனிக்கு உலகில் ‘கிவி’ என்ற பெயர் ஏற்பட்டது.

மேலும் பல்லாயிரம் ஆண்டுகளாக, இந்தக் கனியானது சீன நாட்டில் பயிரிடப்படுவதால், இந்தக் கனியை, உலகிலுள்ள மக்கள் பொதுவாக ‘சீனத்து நெல்லிக்கனி’ (Chinese Gooseberry) என்றும் அழைக்கிறார்கள். தற்பொழுது இத்தகைய கனியானது, நியூஸிலாந்து, இத்தாலி, சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்தக் கனியின் மருத்துவப் பண்புகள்:

உலகெங்கும் பல்வகையான நாடுகளில் உணவியல் அடிப்படையிலும், மருத்துவ அடிப்படையிலும் நடத்தப்பட்ட விரிவான ஆய்வுகள் யாவும், இந்தக் கனியை சிறந்த ‘மருத்துவப் பெட்டகம்’ என போற்றுகின்றன.கிவி கனியில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவான அளவில் உள்ளது. இதன் காரணமாக, தங்கள் உடலின் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இந்தக் கனியை அச்சமில்லாமல் உண்ணலாம்.பொதுவாக விட்டமின் ‘சி’ அதிக அளவில் உள்ளது.நோயைத் தடுக்கும் ஆற்றல் அதிகம் பெற்றுள்ளது!

நமது உடலில் கட்டுப்பாடு இல்லாமல் திரியும் ‘ரேடிக்கிள்கள்’தான் பல்வகையான சிதைவு நோய்களுக்கும், செல்களின் சிதைவிற்கும் அடிப்படைக் காரணங்களாக அமைந்துள்ளன. இத்தகைய ரேடிக்கிள்களின் வன்தன்மையை அழித்து நோயின்றி நம்மை காக்கும் ஆற்றல் இத்தகைய கனிக்கு இயற்கையாக உள்ளது.முதுமைக் கால கண் நோய்களைத் தடுக் ,விட்டமின் சி என்ற சத்துடன் இணைந்து, மேற்கூறிய முதுமையின் காரணமாக ஏற்படும் சிதைவு நோய்களான, கண் புரை, விழித்திரை சிதைவு நோயைத் தடுக்கின்றது.

இதயத்துடிப்பின் சீரற்ற நிலையைத் தடுக்க துணைபுரிகின்றது! இதயத்தின் துடிப்பை சீராக கட்டுப்படுத்துகின்றது. உடலில் பொட்டாசியத்தின் அளவானது குறைந்தால், இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படக்கூடும். கிவி கனியில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இந்த சத்தானது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

மாரடைப்பைத் தடுக்கின்றது:
மாரடைப்பிற்கு முன்னர் பல்வகையான நோயியல் நிகழ்வுகள் இதய தமணிகளில் நிகழ்கின்றன. இவற்றில் மிகவும் முக்கியமானது இரத்தக் குழாய்களிலுள்ள இரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள், தட்டகங்கள் இவை யாவும் ஒன்றாகக் குழுமி, கட்டியாக அடைப்பாக மாறி, இதய தமணிகளில் இரத்தம் செல்ல இயலாமல் முழுமையாக அடைத்து மாரடைப்பிற்கு (Heart Attack) வழிவகுக்கின்றது. இவ்வாறு இதய தமணிகளில் இரத்தக் கட்டி உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் ‘கிவி’ கனிக்கு இயற்கையாக உள்ளது.வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற கனியாகும்:கிவி பழத்தில் ‘ஃபோலேவி(FOLATE) என்ற சத்தும், ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலமும் மற்ற கனிகளை விட மிகவும் அதிகமான அளவில் உள்ளது.

இத்தகைய சத்துக்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ள சத்துக்களில் சிறந்ததாக உணவியல் வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.எனவே, வளரும் குழந்தைகளுக்கு இக்கனியை அளிப்பது மூளையின் வளர்ச்சிக்கு உதவும்.

நீரிழிவு நோயாளி உண்பதற்கு சிறந்த கனி:
ஏனென்றால், கிவி கனியின் சர்க்கரை குறியீடின் அளவானது மிகவும் குறைவான அளவாக இருப்பதால், இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை மற்ற கனிகளைப் போல் விரைவாக அதிகமாக்காமல், கொஞ்சமாகும் நிலையாகவும் நிலை நிறுத்துவதால், நீரிழிவு நோயாளிகள் உண்பதற்கு சிறந்த கனியாகக் கருதப்படுகிறது.
உடலின் எடையைக் குறைப்பவர்களுக்கு சிறந்த மருந்து!உடலின் எடையைக் குறைப்பவர்களுக்கு கிவி கனியானது மிகவும் சிறந்த கனியாக கருதப்படுகின்றது. ஏனென்றால், மற்ற கனிகளுடன் ஒப்பிடும் பொழுது கிவியில் மிகவும் குறைவான அளவில் கலோரிகள் உள்ளன. ஒரு சாதாரண கனியில் சுமார் 3.8 கலோரிகள் மட்டும்தான் உள்ளன. ஆனால், ஆரஞ்சில் 20.9 கலோரிகளும், வாழைப்பழத்தில் சுமார் 22.4 கலோரிகளும் மற்றும் ஆப்பிளிலும், பேரிக்காயிலும் சுமார் 32.8 கலோரிகளும் உள்ளன.உடலின் எடையைக் குறைக்கும் ஆர்வமுடையவர்கள் இந்தக் கனியை பாதுகாப்பாக அன்றாடம் உண்ணலாம்.

மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாகும்:

கிவி கனியில் அளவிற்கு அதிகமாக நார்ப்பகுதிகள் இயற்கையான வடிவத்தில் இருப்பதால், கிவி கனிகளை உட்கொள்வதன் மூலம் இயற்கையான மலச்சிக்கலை மிகவும் எளிதாக அகற்ற முடியும்.
பெண்கள் எளிதாக கருவுறுதலுக்கான வாய்ப்பை அளிக்கின்றது:
விட்டமின் ஈ-யானது பெண்களின் சருமத்தை இளமைப் பொலிவுடன் வைத்திருக்க துணை புரிவதோடு அல்லாமல், பெண்கள் மிகவும் எளிதாகக் கருவுறும் தன்மையை உருவாக்குகின்றது.

ஆஸ்துமா நோயாளிக்கு மிகவும் சிறந்த உணவு:

சில மனிதர்களுக்கு ஏற்படும் மூச்சுத் திணறல் மற்றும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த உணவாகச் செயல்படுகின்றது. மேலும் நுரையீரல்கள் செயல்திறனை அதிகரிக்க இந்தக் கனி பயன்படுகின்றது.
பல்வகையான சத்துக்கள் மிகுந்த கனிகளில் சிறந்த கனியாகக் கருதப்படுகின்றது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ரட்ஜர் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த உணவியல் வல்லுநர்கள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வகையான கனிகளிடம், கிவியின் ‘சத்து அடர்வு நிலை’ பற்றி விரிவான ஆய்வு ஒன்று நிகழ்த்தப்பட்டபொழுது, இவர்கள் ஆய்வு செய்த 18 வகையான கனிகளில் அதிக அளவு சத்துக்கள் பொதிந்த சிறந்த கனியாக கிவியைக் கருதுகின்றார்கள். இத்தகைய ஆய்வு முடிவை இவர்கள் அமெரிக்காவில் புகழ்பெற்று விளங்கும் The Journal of American College of Nutrition என்ற உணவியல் இதழில் விரிவான ஆய்வுக் கட்டுரையாக வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வுக் கட்டுரையின் முக்கிய தகவல்கள்:

உணவு, மருந்துக் கட்டுப்பாடு அமைப்பானது, ஒரு மனிதன் நலமாக வாழ வேண்டுமென்றால் அவனுக்கு குறைந்தது 9 வகையான முக்கிய சத்துக்கள் அன்றாட உணவில் தேவைப்படுகின்றது. இத்தகைய சத்துக்களை ஒரு தனிமனிதன் பெற வேண்டுமென்றால் அவன் அன்றாட உணவில், பல்வகையான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். ஆனால், இந்த 9 வகையான சத்துக்களும் ஒருசேர கிவி என்ற கனியில் பொதிந்துள்ளது என குறிப்பிடுகின்றார்கள்.உணவியல் குறியீட்டில் கனிவகைகளில் அதிக எண்ணை உடைய கனியாக கிவி கருதப்படுகின்றது.

உணவியல் வல்லுநர்கள் கனிகள் வகைகளில் கிவி கனிக்கு உணவியல் குறியீடு எண்ணாக அதிக அளவு சத்துக்கள் நிறைந்த கனி என்பதால், இதற்கு 16 என்ற எண்ணை வழங்கியுள்ளார்கள். இது முதல் இடமாகும். இதற்கு அடுத்தபடியாக உணவுக் குறியீடு உள்ள கனியான பப்பாளிக்கு 14 அளித்துள்ளார்கள். மெலன் என்ற தர்பூசணிக்கு 13 என்ற குறியீடு எண்ணும், ஸ்ட்ரா பெர்ரிக்கு உணவுக் குறியீடு எண் 12-ம், மாங்கனிக்கு 12-ம், ஆரஞ்சு வகைகளுக்கு குறியீடு எண் 11-ம் வழங்கியுள்ளனர்.இத்தகைய கனியானதுஎவ்வகையான பருவங்களில் கிடைக்கின்றன?
இக்கனிக்கு சிறந்த பருவம் ஜூன் மாதத்திலிருந்து அடுத்த ஆண்டு மார்ச் வரை சிறந்த பருவமாகக் கருதப்படுகின்றது.

இத்தகைய கனிகளில் எத்தனை வகைகள் உள்ளன?

கிவி கனியில் மூன்று வகைகள் உள்ளன. 1. பச்சை நிற கிவி பழங்கள். 2. தங்க நிற கிவி பழங்கள். 3. சிவப்பு நிற கிவி பழங்கள். முதன் முதலாக இறக்குமதி செய்யப்பட்டது பச்சை நிறத்தில் உள்ள வகைதான். இத்தகைய வகைதான் கடந்த 10 ஆண்டுகளாக அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றது. இதன் அகப்பகுதியானது பச்சையாக இருக்கும்; வெளித் தோலானது சற்று பழுப்பு நிறமாகக் காணப்படும். ஒவ்வொரு கனியும் சுமார் 50 முதல் 60 கிராம் அளவு இருக்கும்.

அண்மைக் காலங்களில் தங்க நிற கிவி பழம் என்ற புதிய வகை இறக்குமதி செய்யப்படுகின்றது. இதன் சதைப் பகுதியானது மஞ்சள் வண்ணத்தில் இருப்பதால் இதற்கு இந்தப் பெயராகும். இந்த வகையாவது, பச்சை வகையை விட அதிக சுவையாக இருக்கும்.

மேலை நாடுகளில் அண்மையில் கிவியில், சிவப்பு வகை என்ற கிவி பழம் விற்பனையில் உள்ளது. கிவி நியூசிலாந்து, இத்தாலி போன்ற நாடுகளில் விற்பனையில் உள்ளன..



 

வெந்தயம்

வெந்தயம்





மஞ்சள், மிளகு, கடுகு, வெந்தயம்னு அஞ்சறைப் பெட்டியில இருக்கற எந்த பொருளா இருந்தாலும், அதை நல்லா தூய்மைப்படுத்தி பயன்படுத்தினா... அதோட பலனே வேற. அந்த வகையில, இந்தத் தடவை வெந்தய மகிமையைப் பார்க்கலாமா!

வெந்தயம், ரொம்பவும் குளிர்ச்சி தரக்கூடியது. ஆனா, அதை நாம சாப்பாட்டுல பயன்படுத்துற அளவு ரொம்பவே குறைவு! வெந்தயத்தை நீராகாரத்துல ஒரு மணி நேரம் ஊற வெச்சு உலர்த்தினா... தூய்மையாயிடும். இந்த வெந்தயத்துல கொஞ்சத்தை வாயில போட்டுட்டு... தண்ணி, இல்லைனா மோரை குடிச்சா... சூட்டால உடம்புல உண்டாகுற எரிச்சல் குறையும். சீதபேதி, வயிறு இரைச்சல், வயித்துப் பொருமல் மாதிரியான பிரச்னைகள் இருந்தாலும் சரியாகும். இதேபோல தினமும் கொஞ்சம் வெந்தயத்தை சாப்பிட்டு... தண்ணி, இல்லைனா மோரை குடிச்சுட்டு வந்தா... அஜீரணக் கோளாறு, வயிற்றுப்புண், வயிறு எரிச்சல் மாதிரியான சமாசாரங்கள் உங்க பக்கமே தலைவெச்சு படுக்காது.

அரை ஸ்பூன் வெந்தயத்தை வேக வெச்சு, அதோட கொஞ்சம் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தா... தாய்ப்பால் அதிகமா சுரக்கும். வெந்தயத்தையும், சீரகத்தையும் சம அளவு எடுத்து காய வெச்சு தூளாக்கிக்கோங்க. இதை காலை, மாலை அரை ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தா... மதுமேகம் (சர்க்கரை நோய்) தாக்கம் குறைஞ்சு, நாளடைவில நல்ல பலன் கிடைக்கும்!

தினமும் காலையில வெறும் வயித்துல ஒரு ஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தா... சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். சர்க்கரை நோய் இல்லாதவங்களும் இப்படி சாப்பிட்டு வரலாம். இதனால எந்த எதிர்விளைவும் இருக்காது!

வாய்ப்புண், வயித்துப்புண் தொந்தரவு இருக்குதா? ஒரு இளநீரை வாங்கி, அதுல ஓட்டைப் போட்டு, ஒரு கைப்பிடி வெந்தயத்தை உள்ள போட்டு மூடிடுங்க. ராத்திரியில அதை மொட்டை மாடியில பத்திரமா வெச்சு, காலையில அந்த வெந்தயத்தை சாப்பிடறதோட... இளநீரையும் குடிச்சா நல்ல பலன் கிடைக்கும்.

இப்படியெல்லாம் வெந்தயத்தை சாப்பிட விரும்பாதவங்க... தோசை, களினு பலகாரங்களா செய்தும்கூட சாப்பிடலாம். வெந்தயக்குழம்பு வெச்சும் சாப்பிடலாம். இதன் மூலமாவும் நல்ல பலன்களை அடையலாம்!